"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

திருக்குறளை பரப்பப் போகிறதாம் ஏர்டெல்!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை தனது செல்பேசியின் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்போவதாக பார்த்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தென்னிந்திய சேவைகளுக்கான தலைமை செயல் அலுவலர் ராஜீவ் ராஜகோபால் இதைத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் செல்பேசி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசியில் 54321 என்ற எண்ணிற்கு குறுஞ்சேவை செய்து விண்ணப்பித்தால் ஒரு நாளைக்கு ஒரு குறள், அதன் விளக்கத்துடன் அனுப்பப்படும் என்றும், அதற்கு ஒரு ரூபாய் வசூலிக்க்ப்படும் என்றும் ராஜீவ் ராஜகோபால் கூறியதாக யு.என்.ஐ.செய்தி கூறுகிறது.

பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருப்பவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவர்தான் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் (Federation of Industries and commerce of India -FICCI) தலைவராகவும் உள்ளார். தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை ஐஃபா(India International film Academy - IIFA)வுடன் இணைந்து நடத்தியது இந்த ஃபிக்கி அமைப்புதான்

இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து


சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

இந்திய ஆஷ்கார் தேர்வுக்குழுவில் கடமையாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு!சர்வதேச புகழ் பெற்ற ஆஷ்கார் விருதுகளுக்கு, இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பில்
மதிப்பீடு செய்யும் இந்திய ஒஷ்கார் தெரிவுக் குழுவில், நடு நிலைமையாளராக செயற்படும் வாய்ப்பினை, இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலித்தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்துக்காக, சிறந்த இசை, ஒலிப்பதிவு பிரிவுகளில் இருவரும் ஆஷ்கார் விருதுகளை
பெற்றுக்கொண்டனர்.

செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!


செம்மொழி மாட்டின் உச்ச நோக்கம் தவறிச் செல்கின்றது எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளுக்குள் பொதிந்துள்ள உண்மை விளக்கி, தமிழ் மொழி ஒரு செம்மொழிதான் என்பதை அயல் நாட்டவரிடம் உரைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. செம்மொழி

மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில், பார்க்க வேண்டிய ஒரு ஒளிப்பதிவு இது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆங்கிலத்தில் அயல்நாட்டவரிடம் செம்மொழியான தமிழ்மொழியின் தாத்பரியம் குறித்து அவர் சுருக்கமாகத் தெரிவித்த விளக்ககத்தின் ஒளிப்பதிவு இது.

தமிழறிஞரும், ஆர்வலரும், தமிழருமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செம்மொழிமாநாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது ஓரங்கட்டப்பட்டுள்ளார், எனப் பல்வேறு தரப்புக்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.