"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

இந்திய ஆஷ்கார் தேர்வுக்குழுவில் கடமையாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு!சர்வதேச புகழ் பெற்ற ஆஷ்கார் விருதுகளுக்கு, இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பில்
மதிப்பீடு செய்யும் இந்திய ஒஷ்கார் தெரிவுக் குழுவில், நடு நிலைமையாளராக செயற்படும் வாய்ப்பினை, இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலித்தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்துக்காக, சிறந்த இசை, ஒலிப்பதிவு பிரிவுகளில் இருவரும் ஆஷ்கார் விருதுகளை
பெற்றுக்கொண்டனர்.

இதனால், இருவருக்கும் இவ்வாய்ப்பினை தேர்வுக்குழு வழங்கியுள்ளது. இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், இது மிகப்பெரிய பொறுப்பு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. இப்போது எனக்கு கூடுதல் பணி கொடுக்கப்பட்டுள்ளது. இனி இதனை திறம்பட செய்ய வேண்டும் என்றார்.
இது எனக்கு ஆனந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என ரசூல்பூக்குட்டி தெரிவித்தார். மும்பையில் உள்ள அவரது வீட்டில் குவிந்த திரளான ரசிகர்கள் ரசூல் பூக்குட்டியை வாழ்த்தினர்.தற்சமயம், ஏ.ஆர்.ரஹ்மான் 'ஜெய்ஹோ' இசை நிகழ்ச்சிக்களை மேற்குலக நாடுகளில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.