"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

"தனி நாடு பெறுவோம் தமிழனாய் வாழ"

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!
தமிழன் உலகம் முழுவதும் இருப்பான் ஆனால் அவனுக்கென்று என்று ஒரு நாடு கிடையாது என்பதை புலவர் அப்பொழுதே சொல்லி விட்டார் போலும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முத்த மொழி நம் தமிழ் செம்மொழி. ஆனால் அந்த மொழிக்கு இன்று வரை ஒரு தனி நாடு இல்லையம்.
உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்திய கருணாநிதி அந்த மொழிக்கென்று தனிநாடு பெற்றுத்தர மறந்துவிட்டார் இல்லை,இல்லை மறுத்துவிட்டார்.
பொதுநலம் மட்டுமே தன் நலமாக கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரும்,பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ்யை பிரித்து பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வழிவகுத்த இந்திராகாந்தி அம்மையாரும் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது இருக்கும் தமிழின துரோகிகளால் நமது இனம் நய வஞ்சகமான முறையில் பழி தீர்க்கப்பட்டது
தமிழர்களுக்கு தனி நாடு உருவாவதர்க்கான சூழ்நிலையை தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவக்கபட்டபோதிலும்,தமிழ் இனத்தில் அன்றைய எட்டப்பன் காலத்தில் தொடங்கிய காட்டிக்கொடுத்தல்  இன்றைய தமிழின துரோகி கருணா வரை தொடர்ந்ததாலும்,நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலும் அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம் இதற்க்கு முழுக்க முழுக்க கரணம் நாமே,நமது ஒற்றுமையின்மையே இதனாலையே பழமையும் ,வளமையும்,செழுமையும்,திறமையும் கொண்ட நாம் தமிழ் இனம் இன்று வரை அடிமைபட்டுகிடக்கிறது
.
தலைவர் பிரபாகரன் அவர்கள் தலைமயில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுருந்தால்,இன்று நாம் அனைவரும் தமிழருக்கென ஒரு தனி நாடு பெற்றுருப்போம்.நமது மொழியும் நமது இனமும் செழிப்புடன் இருந்துருக்கும்.இனிமேலும் நமது இனம் ஒன்றுபட்டு போராடாவிட்டால் நமது மொழியும், நமது இனமும் இந்த பூமி உருண்டையில் இருந்து அழிக்கப்படுவது மட்டும் உறுதி 
உலகம் முழுவதும் தமிழர்கள் வாழ்ந்த போதிலும் அங்கெள்ளாம் தமிழர்கள் முன்றாம்,நான்காம் குடிமக்களாக இல்லை மனிதர்களாக நடத்தபடுவதே சந்தேகமாக உள்ளது.
தமிழர்கள் முதல் தர குடிமக்களாக நடத்தப்படவேண்டும்.முழுக்க,முழுக்க அவர்களுக்கே முன்னுரிமை தரப்படவேண்டும்.அதற்க்கு தனி நாடு வேண்டும்.
அதற்க்காக தனி ஈழம் உருவாக்கப்படவேண்டும்.பல அறிஞர்களையும்,அறிவு ஜீவிதிகளையும் கொண்ட தமிழ் இனம் அதற்க்கான பலனை அனுபவிக்க வேண்டும் அவர்களுடைய திறமைகள் அனைத்தும் அடுத்த இனத்திற்க்காகவும்    
அடுத்த நட்டிற்க்காகவும் பயன்படுத்தபடுவது தடுக்கப்படவேண்டும் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற நிலை உருவகிடவேண்டும் 
அதற்க்கு உலக தமிழர்கள் ஒன்றுனைக்கப்படவேண்டும், தமிழர்களின் நிலைமையை  அவர்களுக்கு உணர்த்தப்படவேண்டும் பிறகு உலகநாடுகளுக்கு  எடுதுரைக்கப்படவேண்டும்.


தமிழனுக்கென்று ஒரு நாடு அது தனி ஈழ நாடு அது கிடைக்கும் வரை போராடு