"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

செந்தில்வேலன் MBBS,IPS -காவல் துறைக்கண்காணிப்பாளர்


சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன் ,இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட மிஸ்டர் நம்பிக்கை .மிடுக்கான தோற்றம்  துடிப்பான வேகத்தோடு ரவுடியிசத்தைக் களை எடுத்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக   முதல் தகவல் அறிக்கை (FIR)  வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்

எனக்கு சொந்த ஊர் மதுரை .என் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியா இருந்தார் . அம்மா ஆசிரியை .முணு அக்கா. நான் தான் கடைசி பையன் என் தாத்தாவோட அப்பா ஆங்கிலேய இந்தியா காலத்தில் போலிஸ இருந்தவர். என் தாத்தாவும்  போலீஸ்தான் . அதனால் சின்ன வயசில் இருந்துதே போலிஸா ஆகணும்னு எனக்கு ஆசை. ஆனால் என் அப்பா நான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார் .சின்னதாக் குழப்பம் .முதல்ல அப்பா ஆசையை நிறைவேத்துவோம் . அப்புறம் போலீஸ் ஆகலாம்னு முடிவு பண்ணினேன். அப்பாவுக்காக மருத்துவம் சேர்ந்தேன்.நல்ல படிச்சேன் .ஆனா,அப்பா என்னை ஏமாத்திட்டார் .நான் மூணாவது வருடம் படிச்சுட்டு இருக்கும் போதே எங்களை தவிக்கவிட்டுட்டு இறந்துட்டார் .மொத்த குடும்ப பொறுப்பும் என் தோளில். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்தில் உள்ள வாய்ப்புதான்னு சொல்லுவாங்க .அதனால் எல்லாத்தையும் பாசிட்டிவாக பார்க்க ஆரம்பிச்சேன்.மருத்துவம் முடிச்சுட்டு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தேன் .

எனக்குள் இருந்த போலீஸ் கனவோடு எப்பவும் நான் சமரசம் செஞ்சுக்கவே இல்லை. வேலை பார்த்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன் . சில சமையம் டபுள் டியூட்டி பார்க்க வேண்டி இருக்கும்.பல நாட்கள் தூங்க முடியாது நோயாளிகள் வந்துட்டே இருப்பாங்க. ஒரு டாக்டர்ரா அவங்களை ௧௦௦ சதவிகிதம் கவனிச்சுக்க வேண்டியது என் கடமை .அதனால் டியூட்டி நேரத்தில் படிக்கவே முடியாது. வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பிச்சேன். பஸ்ல போகும்போது படிப்பு. டீ குடிக்கும்போது படிப்பு சாப்பிடும்போதும் படிப்பு.ரெண்டு நிமிட நேரம் கிடைத்தாலும் படிக்க ஆரம்பிச்சிடுவேன். ஒரு வருஷம் தூக்கம்,பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. வேலை, படிப்புன்னு ஓடிட்டே இருந்தேன். தேர்வு எழுத வேண்டிய நேரம் வந்தது 

முழுசாத் தயாராகிட்டோமான்னு எனக்கே சந்தேகம் இருந்தாலும் நம்பிக்கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன் எதிர்பார்க்காத ஆச்சர்யம் இந்திய அளவில் 86 ஆவது  ரேங்க் ஐ.ஏ.எஸ். ஆகவே வாய்ப்பு கிடைச்சது. ஆனால் ஐ.பி.எஸ்தான் என் சாய்ஸ்னு உறுதியாக இருந்தேன். ஐ.பி.எஸ் ஆனேன்.      

ஜம்மு-காஷ்மீரில் கடுமையான ராணுவ பயற்சி.ஆளை மறைக்கும் பனி படலத்துக்கு நடுவில் கடும் குளிரில் அதிகாலையில் உயரமான பாறைகள் மேல் ஏறணும்.திடீர்னு பாறை உடைஞ்சு உருண்டு வரும் .எந்நேரமும் கவனமா இருக்கணும். இதுதான்
போலீஸ்க்கான பால பாடம்.ராஜஸ்தானில் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பல நாட்கள் கிடந்தோம்.எதுவுமே கஷ்டமாத் தெரியலை. ஏன்னா, சந்தோஷத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யப்படுகிற ஒவ்வொரு வேலையும் ஓர் அழகான அனுபவம்.தொடர் பயிற்சியால் உடம்பு உறுதி ஆச்சு. மனுசு பக்குவம் ஆச்சு.

முதல் முறையா ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் ஏ.எஸ்.பி பொறுப்பு.ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா. எப்பவும் சாதிக்கலவரம் பத்தியெரியாக் கூடிய அசாதாரணச் சூழல். நெருக்கடிமிக்க சூழல்தான் அதிக அனுபவத்தையும்,அதிக அறிவையும் பெற்றுகொள்ளும்
காலம்னு சொல்லுவாங்க.அது உண்மை.அடுத்ததா சிதம்பரத்தில் ஒரு வருஷம் ஏ.எஸ்.பியா இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பால கோஷ்டிகளா இருந்தாங்க.கல்லூரிப் பருவத்துககே உரிய துணிச்சலும்,கோபமும் அடிக்கடி மோதல் சூழலை உருவாக்கிகிட்டு இருந்தது.அதே சமயத்தில்தான் நடராஜர் கோவில் பிரச்னைகள்.சக காவல் துறை நண்பர்களின் உதவியோடு எல்லா பிரச்சனைகளையும் சுமுகமா முடிச்சேன்.என்ன பிரச்னை வெடிச்சுக் கிளம்பினாலும்,'இந்தப் பிரச்சனைய எப்படித் தீர்த்துவைக்கப் போறப்பா?ன்னு எனக்குள் ஒரு செந்தில்வேலன் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுவான்.அவன்கிட்ட கைத்தட்டு வாங்கணுமேன்னு வேகமா, முக்கியமா விவேகமாச் செயல்படுவேன்.

 தஞ்சாவூருக்கு இடமாற்றலாகி வந்தேன். இங்கே தாதாயிசம் அதிகம்.திருட்டு வழக்குகளும் அதிகம்.வந்ததும் ரவுடிகள் பட்டியல் எடுத்து ஓவ்வொருத்தரையும் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பிச்சோம்.ராத்திரி ரோந்து,கண்காணிப்புக் குழுக்கள்னு பல விஷயங்கள் அமல்படுத்தியதும் ரவுடிகள் சேட்டையைக் குறைச்சுட்டாங்க. இது ஒரு நல்ல துவக்கம்.இன்னும் நிறைய துரம் போகணும்தான்.ஆனா,நல்ல துவக்கம் பாதி வெற்றிக்குச் சமம்னு சொல்லுவாங்க.

மக்களுக்கு எதிரா,சட்டத்துக்கு விரோதமா உள்ள எல்லா விசயங்களையும் முடக்கணும். நல்லவங்க மட்டும்தான் ரோட்டில் தைரியமா நடமாடணும்.அப்படி ஒரு சூழல் வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை!  
நன்றி ஆனந்த விகடன்