"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

கிராமமும் விவசாயமும்...

ஒரு நாட்டின் இதயம் அந்த நாட்டின் கிராமங்கள்தான்.ஆனால் இன்று அந்த இதயம் பலவீனம் அடைந்து வருகிறது,ஆம்! கிராமங்கள் காலியாகிவருகின்றன காரணம் வசதிகள்.

நமது சாதனைகளாக கணினிகள் செயற்க்கைகோள்கள் என நீண்டு கொண்டே போகலாம் ஆனால், இவையெல்லாம் கிராமங்களை புறம்தள்ளி செயல்படுத்தபடுமேயானாள் அவன் தனக்கு தானே அழிவை தேடிக்கொள்கிறான் என்பது மட்டும் உறுதி. பல சாதனைகளை செய்துகொண்டுவரும் மனிதனுக்கு உணவு அளிப்பதற்க்கு கிராமங்களால் மட்டும் தான் முடியும் ஆனால், அந்த கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை வசதிகளை செய்து கொடுப்பதில் நான் வாழும் என் தமிழகமானது மிகவும் பின் தங்கிஉள்ளது. சாலைகளும் மின்சாரமும் மட்டும் ஒரு கிராமத்தின் அடிப்படை வசதிகளாக தற்பொழுது இருக்க முடியாது விவசாயத்திற்க்கு தேவையான நீர்
ஆதாரங்களை உருவாக்கி தருவதுதான் இன்றைய கிராமத்தின் அடிப்படை வசதியாக இருக்கமுடியும்உலகப்போர் நிகழும் என்றால் அது நீருக்காக மட்டும் தான் இருக்கும் என ஒரு ஆராய்ச்சி கூறுகிறது.இந்தியாவின் நீர் பிரச்சனையை தீர்க்க முடியும் என்றால் அது நதிகளை இணைப்பதின் மூலமே முடியும் என்று மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் காலம் அவர்கள் கூறினார்கள்
ஆனால், அப்படிபட்ட நீர் ஆதாரங்களை உருவாக்குவதில் நாம் மிகவும் மெத்தனமாக செயல்படுகிறோம் அறிவியலும், விஞ்னாமும் முன்னேறாத அந்த காலத்தில் கூட நீரின் அவசியம் அறிந்து குளம் குட்டைகள் மற்றும் ஏரிகள் வெட்டப்பட்டன அணைக்கட்டுகள் கட்டப்பட்டன ஆனால் இன்று அவைகள் பாதுக்காக்கப்படாவிட்டாலும் பரவாயில்லை அழிக்காமலாவது இருக்கலாம்

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் தாரைவார்க்கபடுகின்றன தற்போதைய விவசாயிகள் நாங்கள் தான் கஷ்டப்படுகிறோம் தங்களின் பிள்ளைகலாவது நன்றாக இருக்கவேண்டும் என்பதற்க்ககா தங்களது நிலங்களை விற்றுவிட்டு நகரங்களுக்கு இடம்பெயர்கின்றனர்.ஒரு சிலர் தங்களது பிள்ளைகள் படித்து நல்ல நிலையை அடைந்தவுடன் தங்களது பூர்வீகமான கிராமங்களை விட்டு காலி செய்து விடுகின்றனர் இப்படியே அனைவரும் கிராமங்களை காலிசெய்துவிட்டால் எதிர்கால என் சந்ததிகள் உணவுக்காக யாரிடம் கையேந்துவது விவசாயிகளின் பிரச்சனைகளை கண்டறிந்து அவற்றை போக்கி விவசாயத்தின் மூல்ம் சிறப்பான நிலையை அடையமுடியும் என்கிற நிலையை இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்தால் அவனுக்கு தேவைபடாதே ஒரு ரூபாய்க்கு அரிசி அவன் கொடுப்பனே அனைவருக்கும் ஒரு ரூபாய்க்கு அரிசி.

நான் சார்ந்து இருக்கும் எனது மாவட்டம் (இராமநாதபுரம்) வறட்ச்சிக்கு பெயர்போன மாவட்டமாக ஆண்டு ஆண்டு காலமாக அறியப்படுகிறது ஆனால் இன்று வரை அதனை கலைவதற்க்கு மத்தியஅரசோ,மாநிலஅரசோ இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.ஆண்டுக்கு ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்யும் மழை நீரை கொண்டு எனது மாவட்டத்தை சேர்ந்த மக்கள் விவசாயம் செய்கின்றனர் ஆனால் அந்த மழைநீரும் சரியான சேமிப்பு முறை இல்லாததால் அதிகமான மழைநீர் கடலில் கலக்கிறது.

தற்பொழுது இருக்கும் இளைய சமுதாயத்திடம் பிற்காலத்தில் என்னவாக வேண்டும் என்று கேட்டால் மருத்துவர்,பொறியாளர் கணினி வல்லுனர் ,ஆட்சியர் ,அரசியல்வாதி என்றுதான் கூறுகிறார்கள் ஒருவர் கூட நான் விவசாயியாக ஆகவேண்டும் என்று கூறுவது கிடையது காரணம் அதில் அதிகமான வருமானம் இல்லை சுகமான வாழ்க்கை வாழமுடியாது இதே நிலை தொடர்ந்தால் எதிர்காலதில் விவசாயத்தின் நிலை என்ன, விவசாயம் செய்வதற்க்கு யார் இருப்பார்கள், விலைவாசி உயர்வையும் உணவு பற்றாக்குறையையும் எப்படி போக்குவது இந்த நிலையை போக்கவேண்டியது மக்களால் ஓட்டுப்போட்டு மக்களுக்கு உழைப்பதார்க்காக தேர்ந்தெடுக்கபட்ட தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் கடமை இல்லையா..

இவற்றை எல்லாம் மக்கள் நலன் மீது உண்மையான அக்கறை உள்ள ஒரு அரசியல் தலைவர்களால் சீக்கிரமாக இல்லாவிட்டாலும் கண்டிப்பாக காலம் கடந்தாவது நிறைவேற்றிருக்கலாம் ஆனால் தற்பொழுது உள்ள அரசியல் தலைவர்கள் அரசியல் என்ற சொல்லுக்கான அர்த்ததையே மாற்றிவிட்டனர் அரசியல் என்றால் அடிதடி,அதிகாரம்.ஆள்பலம்,பணபலம்,என்ற எண்ணத்தை உருவாக்கிவிட்டனர் தங்களின் குடும்பநலனுக்கா தங்களின் பதவியை பயன்படுத்துகின்றனர் மக்களுடைய நலனுக்காகவும் அவர்களுடைய உரிமைக்காகவும் மட்டுமே பணியாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுவரும் அரசியல் தலைவர்கள் அவற்றை தவிர்த்து மற்ற அனைத்து விசயங்களிலும் தங்களின் கவனத்தை செலுதிக்கின்றனர் இது ஒருபுறம் இருக்க ஒரு அரசியல் தலைவர் தவறு செய்துவிட்டார் என்று தெரிந்தும் மீண்டும் அவருக்கே தங்களின் வாக்குகளை செலுத்தி மேலும் தவறிணை என் மக்கள் செய்கின்றனர்.மக்கள் தான் எந்த உயர்ந்த நிலையை அடைந்தாலும் விவசாய தொழிலையும் மேற்கொள்ளவேண்டும்

இனிவரும் காலங்களிலாவது அரசியல் தலைவர்கள் மக்களுக்கு இலவசங்கள் அளிப்பதை தவிர்த்து அவர்கள் உழைப்பதர்க்கானா வாய்ப்பை ஏற்படுத்தி கொடுங்கள். பிறகு என்ன நீங்கள் தேவையில்லை நாட்டை உயர்த்துவதற்க்கு நாடு தானாகவே முன்னேறும்.