"வென்றாக வேண்டும் தமிழ் அதற்கு ஒன்றாக வேண்டும் தமிழர்"-இருப்பாய் தமிழா நெருப்பாய்

எந்திரன் இதயத்திலிருந்து...


இது எந்திரன் பீவர் காலம். உங்கள் இதயத்தில் யார் இடம்பிடித்திருக்கிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒரு எந்திர இதயத்தில் முழு இத்தாலியும் இடம்பிடித்திருக்கிறது. நிரந்தரமாகப் இயங்கக்கூடிய முற்றிலும் செயற்கையாக வடிவைக்கப்பட்ட ஓர் இதயம், 15 வயதே ஆன ஒரு இத்தாலி சிறுவனுக்கு பொருத்தப்பட்ட சம்பவம், மருத்துவ உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பாதுகாப்பு காரணங்களால், இச்சிறுவனின் பெயர் உட்பட மேலதிக விபரங்களை வெளியிட மருத்துவர்கள் விரும்பாத போதும், தொடர்ந்து 10 மணித்தியால அறுவை சிகிச்சை மூலம் இத்தாலிய வைத்தியர்கள் இதனை சாத்தியமாக்கியிருக்கிறார்கள் என்பது தான் மருத்துவ உலகில் நீண்டகாலத்திற்கு பிறகு கிடைத்த ஒரு ஆரோக்கியமான தகவல். சரி இது பற்றி விரிவான ஒரு பார்வை

அச்சிறுவனுக்கு என்னதான் பிரச்சினை? என்ன தீர்வு?

தேவையற்ற சதைக்கழிவுகளில் அவனது இதயத்தில் காணப்பட்டமையினால், உடனடி மாற்று இதயம் பொருத்தப்பட வேண்டியிருந்தது.
ஆனால் வழமை போல இன்னொரு இயற்கை மாற்று இதய அறுவை சிகிச்சைக்கு அவன் தகுதியடையவில்லை என்பது தான், மருத்துவர்களின் கவலை.

மரணத்திற்கு அருகாமையிலேயே சென்று விட்டான் அவன். வேறு வழியில்லையெனும் போது, இத்தாலிய மருத்துவர்களின் யோசனையில் உதித்தது இச்செயற்கை இதயம்.யார் சிகிச்சையை நடத்தினார்கள்? எங்கு நடந்தது?

"தனி நாடு பெறுவோம் தமிழனாய் வாழ"

யாதும் ஊரே!! யாவரும் கேளிர்!!
தமிழன் உலகம் முழுவதும் இருப்பான் ஆனால் அவனுக்கென்று என்று ஒரு நாடு கிடையாது என்பதை புலவர் அப்பொழுதே சொல்லி விட்டார் போலும்
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய முத்த மொழி நம் தமிழ் செம்மொழி. ஆனால் அந்த மொழிக்கு இன்று வரை ஒரு தனி நாடு இல்லையம்.
உலகதமிழ் செம்மொழி மாநாடு நடத்திய கருணாநிதி அந்த மொழிக்கென்று தனிநாடு பெற்றுத்தர மறந்துவிட்டார் இல்லை,இல்லை மறுத்துவிட்டார்.
பொதுநலம் மட்டுமே தன் நலமாக கொண்டு வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜரும்,பாகிஸ்தானிடம் இருந்து பங்களாதேஷ்யை பிரித்து பங்களாதேஷ் மக்கள் சுதந்திரமாக வாழ வழிவகுத்த இந்திராகாந்தி அம்மையாரும் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியில் தற்பொழுது இருக்கும் தமிழின துரோகிகளால் நமது இனம் நய வஞ்சகமான முறையில் பழி தீர்க்கப்பட்டது
தமிழர்களுக்கு தனி நாடு உருவாவதர்க்கான சூழ்நிலையை தலைவர் பிரபாகரன் அவர்களால் உருவக்கபட்டபோதிலும்,தமிழ் இனத்தில் அன்றைய எட்டப்பன் காலத்தில் தொடங்கிய காட்டிக்கொடுத்தல்  இன்றைய தமிழின துரோகி கருணா வரை தொடர்ந்ததாலும்,நம்மிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தினாலும் அந்த வாய்ப்பை நாம் தவறவிட்டோம் இதற்க்கு முழுக்க முழுக்க கரணம் நாமே,நமது ஒற்றுமையின்மையே இதனாலையே பழமையும் ,வளமையும்,செழுமையும்,திறமையும் கொண்ட நாம் தமிழ் இனம் இன்று வரை அடிமைபட்டுகிடக்கிறது

"தமிழோடு வாழ்வோம் தமிழனாய் வாழ்வோம்!"'வணக்கம்! நலமாக இருக்கிறீர்களா?' என்று கரம் குவிக்கிறார்கள்.
எப்போதுமே நாம் அடுத்தவர்கள் சொன்னால் கொஞ்சமாவது அக்கறையுடன் கேட்போம். "தமிழ் வளர நீங்கள் சொல்லும் ஆலோசனைகள் என்ன?" என்று அவர்களிடம் கேட்டோம்.

சீக்கிய உரோமத்துக்குள்ள மதிப்பு, தமிழன் உயிருக்கு இல்லையா? - சீமான் சீற்றம்

60 வருடங்களாக தொடரும் நம் மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு வெறும் அறிக்கையை மட்டும் விடுத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் இலங்கை கடற்படையினரின் அத்து மீறல்கள் தொடர்கின்றது.

பிரான்சில் சீக்கியனின் மயிர்ப் பிரச்சனைக்காக விமானம் ஏறிச்சென்று வாதாடிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தினசரி கொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மீனவனின் உயிர் குறித்து என்றாவது அக்கறை காட்டியிருக்கின்றாரா? என்று சீறியுள்ளார் சீமான் இது தொடர்பாக அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கை வருமாறு

இலங்கை மீது ஐ.நா. போர்க்குற்ற விசாரணை நடத்த ரஷ்யா ஆதரவு அளிக்க வேண்டும்.


1976இல் தந்தை செல்வா தலைமையில், தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் இனி, சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழவே இயலாது என்பதால், ஒரே தீர்வாகத் தனிதாயகத் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராட முடிவெடுத்தனர் என செந்தமிழ்சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் இன்றைக்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, மொரீசியஸ், பிஜி, கயானா, ஆஸ்திரேலியா எனச் சுமார் 200 நாடுகளில் 100 மிலியன் மக்களுக்கு மேல் வாழ்கின்ற பழமை வாய்ந்த ஒரே இனம் தமிழர்களாவர்

செந்தில்வேலன் MBBS,IPS -காவல் துறைக்கண்காணிப்பாளர்


சினிமா கதாநாயகன் அல்ல உண்மையான கதாநாயகன் ,இளம் வயதிலையே சிக்கல்கள் பல கடந்து சிகரம் தொட்ட மிஸ்டர் நம்பிக்கை .மிடுக்கான தோற்றம்  துடிப்பான வேகத்தோடு ரவுடியிசத்தைக் களை எடுத்து வருகிறார். இவர் பொறுப்பேற்றுக்கொண்ட பிறகு அந்த மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் உரிய மரியாதையுடன் உடனடியாக   முதல் தகவல் அறிக்கை (FIR)  வழங்கப்படுகிறது மேலும் அதன் மீது உடனடி நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது மருத்துவம் படித்தவர் என்பதால் அடுத்த நிலை அதிகாரிகளின் மனநிலை உடல்நிலை அறிந்து அதற்கு ஏற்பக் கட்டளை பிறப்பிக்கிறார்.அரசியல்வாதிகளுக்கு கார் கதவை திறந்துவிடும் அதிகாரிகளுக்கு மத்தியில், இவரை கண்டால் அரசியல்வாதிகளும் பயப்படும் நிலையை உருவாக்கியவர்

எனக்கு சொந்த ஊர் மதுரை .என் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியா இருந்தார் . அம்மா ஆசிரியை .முணு அக்கா. நான் தான் கடைசி பையன் என் தாத்தாவோட அப்பா ஆங்கிலேய இந்தியா காலத்தில் போலிஸ இருந்தவர். என் தாத்தாவும்  போலீஸ்தான் . அதனால் சின்ன வயசில் இருந்துதே போலிஸா ஆகணும்னு எனக்கு ஆசை. ஆனால் என் அப்பா நான் டாக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டார் .சின்னதாக் குழப்பம் .முதல்ல அப்பா ஆசையை நிறைவேத்துவோம் . அப்புறம் போலீஸ் ஆகலாம்னு முடிவு பண்ணினேன். அப்பாவுக்காக மருத்துவம் சேர்ந்தேன்.நல்ல படிச்சேன் .ஆனா,அப்பா என்னை ஏமாத்திட்டார் .நான் மூணாவது வருடம் படிச்சுட்டு இருக்கும் போதே எங்களை தவிக்கவிட்டுட்டு இறந்துட்டார் .மொத்த குடும்ப பொறுப்பும் என் தோளில். ஒவ்வொரு பின்னடைவும் மாறு வேடத்தில் உள்ள வாய்ப்புதான்னு சொல்லுவாங்க .அதனால் எல்லாத்தையும் பாசிட்டிவாக பார்க்க ஆரம்பிச்சேன்.மருத்துவம் முடிச்சுட்டு அரசு மருத்துவராக வேலைக்குச் சேர்ந்தேன் .

எனக்குள் இருந்த போலீஸ் கனவோடு எப்பவும் நான் சமரசம் செஞ்சுக்கவே இல்லை. வேலை பார்த்துகிட்டே படிக்க ஆரம்பிச்சேன் . சில சமையம் டபுள் டியூட்டி பார்க்க வேண்டி இருக்கும்.பல நாட்கள் தூங்க முடியாது நோயாளிகள் வந்துட்டே இருப்பாங்க. ஒரு டாக்டர்ரா அவங்களை ௧௦௦ சதவிகிதம் கவனிச்சுக்க வேண்டியது என் கடமை .அதனால் டியூட்டி நேரத்தில் படிக்கவே முடியாது. வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும் நேரத்தில் படிக்க ஆரம்பிச்சேன். பஸ்ல போகும்போது படிப்பு. டீ குடிக்கும்போது படிப்பு சாப்பிடும்போதும் படிப்பு.ரெண்டு நிமிட நேரம் கிடைத்தாலும் படிக்க ஆரம்பிச்சிடுவேன். ஒரு வருஷம் தூக்கம்,பொழுதுபோக்கு எதுவுமே இல்லை. வேலை, படிப்புன்னு ஓடிட்டே இருந்தேன். தேர்வு எழுத வேண்டிய நேரம் வந்தது 

முழுசாத் தயாராகிட்டோமான்னு எனக்கே சந்தேகம் இருந்தாலும் நம்பிக்கையோடு சிவில் சர்வீஸ் தேர்வு எழுதினேன் எதிர்பார்க்காத ஆச்சர்யம் இந்திய அளவில் 86 ஆவது  ரேங்க் ஐ.ஏ.எஸ். ஆகவே வாய்ப்பு கிடைச்சது. ஆனால் ஐ.பி.எஸ்தான் என் சாய்ஸ்னு உறுதியாக இருந்தேன். ஐ.பி.எஸ் ஆனேன்.      

ஜம்மு-காஷ்மீரில் கடுமையான ராணுவ பயற்சி.ஆளை மறைக்கும் பனி படலத்துக்கு நடுவில் கடும் குளிரில் அதிகாலையில் உயரமான பாறைகள் மேல் ஏறணும்.திடீர்னு பாறை உடைஞ்சு உருண்டு வரும் .எந்நேரமும் கவனமா இருக்கணும். இதுதான்
போலீஸ்க்கான பால பாடம்.ராஜஸ்தானில் சுட்டெரிக்கும் பாலைவனத்தில் பல நாட்கள் கிடந்தோம்.எதுவுமே கஷ்டமாத் தெரியலை. ஏன்னா, சந்தோஷத்தோடும் ஈடுபாட்டோடும் செய்யப்படுகிற ஒவ்வொரு வேலையும் ஓர் அழகான அனுபவம்.தொடர் பயிற்சியால் உடம்பு உறுதி ஆச்சு. மனுசு பக்குவம் ஆச்சு.

முதல் முறையா ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் ஏ.எஸ்.பி பொறுப்பு.ரொம்ப சென்சிட்டிவ் ஏரியா. எப்பவும் சாதிக்கலவரம் பத்தியெரியாக் கூடிய அசாதாரணச் சூழல். நெருக்கடிமிக்க சூழல்தான் அதிக அனுபவத்தையும்,அதிக அறிவையும் பெற்றுகொள்ளும்
காலம்னு சொல்லுவாங்க.அது உண்மை.அடுத்ததா சிதம்பரத்தில் ஒரு வருஷம் ஏ.எஸ்.பியா இருந்தேன். அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் பால கோஷ்டிகளா இருந்தாங்க.கல்லூரிப் பருவத்துககே உரிய துணிச்சலும்,கோபமும் அடிக்கடி மோதல் சூழலை உருவாக்கிகிட்டு இருந்தது.அதே சமயத்தில்தான் நடராஜர் கோவில் பிரச்னைகள்.சக காவல் துறை நண்பர்களின் உதவியோடு எல்லா பிரச்சனைகளையும் சுமுகமா முடிச்சேன்.என்ன பிரச்னை வெடிச்சுக் கிளம்பினாலும்,'இந்தப் பிரச்சனைய எப்படித் தீர்த்துவைக்கப் போறப்பா?ன்னு எனக்குள் ஒரு செந்தில்வேலன் வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுடுவான்.அவன்கிட்ட கைத்தட்டு வாங்கணுமேன்னு வேகமா, முக்கியமா விவேகமாச் செயல்படுவேன்.

 தஞ்சாவூருக்கு இடமாற்றலாகி வந்தேன். இங்கே தாதாயிசம் அதிகம்.திருட்டு வழக்குகளும் அதிகம்.வந்ததும் ரவுடிகள் பட்டியல் எடுத்து ஓவ்வொருத்தரையும் தீவிரமாகக் கண்காணிக்க ஆரம்பிச்சோம்.ராத்திரி ரோந்து,கண்காணிப்புக் குழுக்கள்னு பல விஷயங்கள் அமல்படுத்தியதும் ரவுடிகள் சேட்டையைக் குறைச்சுட்டாங்க. இது ஒரு நல்ல துவக்கம்.இன்னும் நிறைய துரம் போகணும்தான்.ஆனா,நல்ல துவக்கம் பாதி வெற்றிக்குச் சமம்னு சொல்லுவாங்க.

மக்களுக்கு எதிரா,சட்டத்துக்கு விரோதமா உள்ள எல்லா விசயங்களையும் முடக்கணும். நல்லவங்க மட்டும்தான் ரோட்டில் தைரியமா நடமாடணும்.அப்படி ஒரு சூழல் வர்ற வரைக்கும் எனக்கு நிம்மதியான உறக்கம் இல்லை!  
நன்றி ஆனந்த விகடன் 

தமிழ் மொழி-தந்தை பெரியார்

தமிழ் என்றால் என்ன? மக்களா? நாடா? மொழியா? நாட்டைப் பொறுத்து, மக்களைப் பொறுத்து மொழிக்குத் தமிழ் என்கின்ற பேர் வந்ததா? அல்லது மொழியைப் பொறுத்து நாட்டுக்கும் மக்களுக்கும் தமிழகம், தமிழ்நாடு, தமிழர் என்கின்ற பேர் வந்ததா? என்ற கேள்விகள் தமிழைப் பொறுத்தவரை வித்து முந்தியா? மரம் முந்தியா? என்ற தர்க்கத்தைப் போன்றதாகவே எனக்குத் தோன்றுகிறது. எப்படியிருந்தாலும் தமிழ்நாடு, தமிழ் மக்கள், தமிழ் மொழி என்கின்ற சொற்களைக் காண்-பதற்கு முன்பிருந்தே, இவற்றைக் காணாதவர்-களிடமிருந்து இந்த மூன்றையும் குறிக்கும்-படியாகத் திராவிடம், திராவிடர், திராவிட மொழி என்பதாகச் சொற்கள் இருந்து வந்த-தையும், வருவதையும் பார்க்கிறோம். தமிழ் மொழியும், அதன் சிதைவுகள் என்று சொல்லப்-படும் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளும், மக்களும் நாடுகளும்கூட தமிழைச் சேர்ந்ததே என்றும்

திருக்குறளை பரப்பப் போகிறதாம் ஏர்டெல்!

உலகப் பொதுமறையாம் திருக்குறளை தனது செல்பேசியின் வாயிலாக தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்லப்போவதாக பார்த்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது!

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தென்னிந்திய சேவைகளுக்கான தலைமை செயல் அலுவலர் ராஜீவ் ராஜகோபால் இதைத் தெரிவித்துள்ளார்.

ஏர்டெல் செல்பேசி வாடிக்கையாளர்கள் தங்கள் செல்பேசியில் 54321 என்ற எண்ணிற்கு குறுஞ்சேவை செய்து விண்ணப்பித்தால் ஒரு நாளைக்கு ஒரு குறள், அதன் விளக்கத்துடன் அனுப்பப்படும் என்றும், அதற்கு ஒரு ரூபாய் வசூலிக்க்ப்படும் என்றும் ராஜீவ் ராஜகோபால் கூறியதாக யு.என்.ஐ.செய்தி கூறுகிறது.

பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலராக இருப்பவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவர்தான் இந்திய தொழில் வர்த்தக அமைப்புகளின் கூட்டமைப்பான ஃபிக்கியின் (Federation of Industries and commerce of India -FICCI) தலைவராகவும் உள்ளார். தமிழர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இலங்கைத் தலைநகர் கொழும்புவில் இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழாவை ஐஃபா(India International film Academy - IIFA)வுடன் இணைந்து நடத்தியது இந்த ஃபிக்கி அமைப்புதான்

இனம் தின்னும் ராஜபக்சே ! கவிஞர் வைரமுத்து


சொந்த நாய்களுக்குச்
சொத்தெழுதி வைக்கும் தேசங்களே!
ஓர் இனமே
நிலமிழந்து நிற்கிறதே
நிலம் மீட்டுத் தாருங்கள்
பூனையொன்று காய்ச்சல் கண்டால்
மெர்சிடீஸ் கார் ஏற்றி
மருத்துவமனை ஏகும் முதல் உலக நாடுகளே!

ஈழத்து உப்பங்கழியில்
மரணத்தை தொட்டு
மனித குலம் நிற்கிறதே!
மனம் இரங்கி வாருங்கள்!

வற்றிய குளத்தில் செத்துக் கிடக்கும்
வாளை மீனைப்போல்
உமிழ்நீர் வற்றிய வாயில்
ஒட்டிக்கிடக்கும் உள்நோக்கோடு
ரொட்டி ரொட்டியென்று
கைநீட்டிடும் சிறுவர்க்குக்
கைகொடுக்க வாருங்கள்!

தமிழச்சிகளின் மானக்குழிகளில்
துப்பாக்கி ஊன்றித் துளைக்கும்
சிங்கள வெறிக் கூத்துக்களை
நிரந்தரமாய் நிறுத்துங்கள்!

இந்திய ஆஷ்கார் தேர்வுக்குழுவில் கடமையாற்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாய்ப்பு!சர்வதேச புகழ் பெற்ற ஆஷ்கார் விருதுகளுக்கு, இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்படும் திரைப்படங்கள் தொடர்பில்
மதிப்பீடு செய்யும் இந்திய ஒஷ்கார் தெரிவுக் குழுவில், நடு நிலைமையாளராக செயற்படும் வாய்ப்பினை, இசைய மைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ஒலித்தொகுப்பாளர் ரசூல் பூக்குட்டி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு, ஸ்லம்டோக் மில்லியனர் திரைப்படத்துக்காக, சிறந்த இசை, ஒலிப்பதிவு பிரிவுகளில் இருவரும் ஆஷ்கார் விருதுகளை
பெற்றுக்கொண்டனர்.

செம்மொழியான தமிழ்மொழியை உலகிற்கு உரைத்தார், அப்துல் கலாம்!


செம்மொழி மாட்டின் உச்ச நோக்கம் தவறிச் செல்கின்றது எனப் பலராலும் தெரிவிக்கப்பட்டு வரும் இன்றைய நிலையில், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற வரிகளுக்குள் பொதிந்துள்ள உண்மை விளக்கி, தமிழ் மொழி ஒரு செம்மொழிதான் என்பதை அயல் நாட்டவரிடம் உரைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உரை ஒன்று முக்கியத்துவம் பெறுகிறது. செம்மொழி

மாநாடு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்துள்ள நிலையில், பார்க்க வேண்டிய ஒரு ஒளிப்பதிவு இது. ஐரோப்பிய ஒன்றியக் கூட்டத் தொடர் ஒன்றில் ஆங்கிலத்தில் அயல்நாட்டவரிடம் செம்மொழியான தமிழ்மொழியின் தாத்பரியம் குறித்து அவர் சுருக்கமாகத் தெரிவித்த விளக்ககத்தின் ஒளிப்பதிவு இது.

தமிழறிஞரும், ஆர்வலரும், தமிழருமான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் செம்மொழிமாநாட்டில் சேர்த்துக்கொள்ளப்படாது ஓரங்கட்டப்பட்டுள்ளார், எனப் பல்வேறு தரப்புக்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
.